வவுனியா A9 வீதியில் நான்கு வாகனங்கள் மோதி விபத்து!!

1456
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

விபத்து..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா – கண்டி ஏ 9 வீதி பூஓயா இராணுவ சோதனை சாவடியில் நான்கு வாகனங்கள் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று (22.09.2020) காலை மதவாச்சி ஏ9 வீதி பூஓயா பாலம் அருகே நான்கு வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் மட்டுமே சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் வாகனங்கள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

வவுனியாவை நோக்கி பயணிக்கும் வாகனங்களை புஓயா பாலம் அருகே காணப்படும் இராணுவ சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை மேற்கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

புஓயா பாலம் அருகே சோதனைக்காக தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி, கப்ரக வாகனம், ஹயஸ் வாகனம் மீது வேகமாக வந்த லொறி ஒன்று மோதியதால் கப்ரக வாகனத்துக்கும், ஹயஸ் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய கு ற்றச்சா ட்டில் வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து மதவாச்சி பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890