மற்றுமொரு சட்டத்தை கடுமையாக அமுலாக்கும் அரசாங்கம்!!

459


போலிச் செய்தி..


போலிச் செய்தி வெளியிடுவது தொடர்பிலான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த சமகால அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. விசேடமாக இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்தி வெளியிடுவதனை காண முடிவதாகவும், இதனால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.தற்போது நாட்டிலுள்ள சட்டத்திட்டங்கள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பங்களின் கீழ் அதனை கண்காணிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.


போலிச் செய்திகள் பதிவிடுவது தொடர்பிலான புதிய சட்டத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.