மலேசியாவில் 2, 270 போலி வங்கி ஏ.ரி.எம். அட்டைகளுடன் இரண்டு இலங்கை பிரஜைகள் கைது!!

600

ATMமலேசியா அம்பாங், தாமன் கெம்பகா பிரதேசத்தில் உள்ள எக்ஸிஸ் சேஹோ என்ற வீடமைப்பு தொகுதியை நேற்றிரவு 8 மணியளவில் சோதனையிட்ட பொலிஸார் இந்த இலங்கை பிரஜைகளை கைது செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் வெளியிட்ட சிலாங்கூர் மாநில பொலிஸ் துறையின் பொருளாதார குற்றவியல் தலைமை அதிகாரியான உதவி பொலிஸ் ஆணையாளர் சோங் முன் பிங்,

இரவு 8 மணியளவில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அங்கு பாதுகாப்பான பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 217 ஏ.ரி.எம். அட்டைகள், அச்சிடும் இயந்திரம், கார்ட் ரீடர், இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு மடிக் கணனி என்பன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகளின் ஒருவர் மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து அதற்கான அடையாள அட்டை வைத்திருந்தார். அவர் 2008 ஆம் ஆண்டு முதல் அகதியாக இருந்து வந்துள்ளார்.

மற்றைய நபர் சுற்றுலா வீசா அனுமதியில் மலேசியாவுக்கு வந்திருந்ததுடன் கடந்த மாதம் அவரது வீசா காலவதியாகியுள்ளது.

28 மற்றும் 38 வயதான இந்த சந்தேக நபர்கள் ஏ.ரி.எம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகள் உள்ளூர் இயந்திரங்களில் ஆயிரம் ரிங்கிட்டுகளை எடுக்க முடியும். இவர்கள் ஒவ்வாறு இயந்திரங்களில் இருந்தும் பணத்தை எடுத்துள்ளனர்.

ஏ.ரி.எம். இயந்திரங்களில் பணத்தை எடுக்கும் நபர்களின் இரகசிய எண்களை பாதுகாப்பு பெட்டிகள் மூலம் பதிவு செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஏ.ரி.எம் அட்டைகள் வழமையான அட்டைகள் போன்று காணப்படவில்லை. எனினும் பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனைகளில் ஆயிரத்து 300 வெளிநாட்டவர்களின் வங்கி தரவுகள் சந்தேக நபர்களிடம் இருந்துள்ளன.

சந்தேக நபர்கள் கடந்த இரண்டு மாதங்களில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் செயற்பட்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் இரகசிய எண்கள் வெளிநாடுகளில் இருந்து மின்னஞ்சல்கள் மூலம் இவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உதவி பொலிஸ் ஆணையாளர் சோங் முன் பிங் தெரிவித்தார்.