ஒரே நேரத்தில் 21 வாகனங்கள் மோதி விபத்து : வெளியான காரணம்!!

797

21 வாகனங்கள் மோதி விபத்து..

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் பிரதான சாலை ஒன்றில் 21 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தொடர் வாகன விபத்துக்கு காரணம் மூடுபனி என்பது தெரிய வந்துள்ளது.

திங்களன்று பகல் நடந்த இந்த சாலை விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளது.  ஷார்ஜா மாகாணத்தில் இருந்து Umm Al Quwain நோக்கி எமிரேட்ஸ் சாலையில் பயணமான வாகனங்களே விபத்தில் சிக்கியுள்ளன.

உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலின் அடிப்படையில், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிய வந்ததும், மருத்துவ குழுவினருடன் ஆம்புலன்ஸ் சேவை விரைந்ததாகவும், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஷார்ஜா மாகாண பொலிசார் களமிறங்கி வாகன நெரிசல் ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொண்டதுடன், விபத்தில் சிக்கிய வாகனங்களையும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி, சாரதிகள் கவனமுடன் வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும், சாலை தெளிவாக தெரியாமல் போனால் வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு காத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.