வவுனியாவில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்!!

1349

இளம் பெண்..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை பகுதியில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்னத்தம்பனை பகுதியில் இன்று (26.09.2020) மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 27 வயது மதிக்கத்த பெண் வீட்டில் நஞ்சருந்திய நிலையில் ஆபத்தான நிலையில் காணப்பட்டதனையடுத்து,

அயலவர்கள் உடனடியான செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.