வவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்!!

807

தேங்காய்..

தேங்காயின் விலை அதிகரிப்பு காரணமாக வவுனியா சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேங்காய்க்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த விலையில் தேங்காயை பெற்று கொள்ள முடியவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய் அத்தியவசியமான விற்பனை பொருளாக சந்தையில் உள்ள போதிலும் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. தேங்காய்கள் அவற்றின் அளவுக்கேற்ப 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையில் வவுனியாவில் விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து வவுனியாவிற்கு தேங்காய் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய்க்கான நிர்ணய விலையானது 25 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காயை 70 ரூபாவுக்கும், 12 முதல் 13 அங்குலம் வரையான தேங்காயை 65 ரூபாவுக்கும்,

12 அங்குலத்திற்கு குறைவான தேங்காயை 60 ரூபாவுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அதியுச்ச நிர்ணய விலையை அறிவித்து நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.