வவுனியா வீரபுரத்தில் 5 வருடங்களாக பாவனையற்று பற்றைகளாக காணப்படும் பலநோக்கு கூட்டுறவு சங்கம்!!

361


வீரபுரத்தில்..


வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்குடப்பட்ட வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பாவனையற்று பற்றைக்காடாக காணப்படுகின்றது.பல மில்லின் ரூபா செலவில் கட்டப்பட்ட குறித்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையிலும் மேல் கூரைகள் பழுதடைந்த நிலையிலும் காணப்படுவதுடன் கால்நடைகளின் வசிப்பிடமாகவும் மாற்றமடைந்துள்ளதுடன் பற்றைக்காடாகவும் காட்சியளிக்கின்றது.


பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள இக் கட்டிடம் தற்போது ச ட்டவி ரோத செயற்பாடுகளின் இடமாக மாற்றம் பெற்றுள்ளமை வேதனையளிக்கும் விடயமென பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


உரிய அதிகாரிகள் இக் கட்டிடம் தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களுக்கு நியமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினை மீண்டும் நிறுவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.