நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால் : சகல துறைகளுக்கும் அழைப்பு!!

1941

நாளைய தினம்..

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது. அரசாங்கத் தரப்பிலோ, பாதுகாப்புத் தரப்பிலோ அல்லது அரசாங்கப் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களிடத்தில் இருந்தோ இந்த ஒற்றுமையை, அரசியல் உரிமையை,

ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற ஒன்றுபட்டு நிற்கின்ற இந்நிகழ்ச்சியைச் சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. மக்கள் இதனைச் செய்பவர்களுக்கு இடமளிக்கக் கூடாது.

தற்போது இணைந்துள்ள பத்துக் கட்சிகளில் உள்ள பல தொழில் துறையைச் சார்ந்தவர்கள், போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள், தனியார் துறையைச் சேர்ந்தவர்கள், இந்த ஹர்த்தால் பொது வேலைநிறுத்தத்தை பூரணமாக, அர்ப்பணிப்போடு முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.