வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் தெரிவிப்பு : கடைகளை திறக்காத வர்த்தகர்கள்!!

1506

வவுனியாவில்..

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எ திராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் , இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றைய தினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்த்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிசார் கட்டளையிட்ட போதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல் கர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடைகளைத் திறக்குமாறு ஒலிபெருக்கியில் பொலிஸார் எச்சரிக்கை!!

வவுனியாவில் கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் கடையடைப்பை மேற்கொண்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பொலிஸார் ஒலிபெருக்கியூடாக கடைகளை திறக்குமாறும் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.

தமிழ்த் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.