ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை : மீண்டும் பரபரப்பு!!

605

high courtஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் மனு மீதான விசாரணையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது..

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை முடிவு விஷயத்தில் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, தமிழக அரசு அவர்களை விடுவிக்க கூடாது.

3 நாட்களில் 7 பேரையும் விடுவிக்க கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும்.

விடுதலை செய்ய முடிவு எடுத்தது குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் 7 பெரும் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.