செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் திரவ ஏரிகள்!!

507

செவ்வாய்

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலத்திற்கு அடியில் திரவ ஏரிகள் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அடியில் பாரிய உப்பு நீர் ஏரி இருக்கலாம் என ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.

இந்த கண்டுபிடிப்புகள் வேற்று கிரகங்களில் வாழும் உயிர்களை கண்டறியும் ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை ஆராய ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகவர் அமைப்பு அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் உள்ள நவீன ரேடார் கருவி செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தின் அடியில் திரவ ஏரிகள் இருப்பதை கண்டறிந்துள்ளது.