வவுனியாவில் மன்னார் ஆயருக்கு எதிராக போலியான துண்டுப் பிரசுரம் : வன்மையாகக் கண்டிக்கும் மன்னார் மாவட்ட இந்து மகா சபை!!

547

Rayappuமன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு எதிராக வெளியான துண்டுபிரசுரம் இந்து கிறிஸ்தவ மத உறவை குழப்பும் திட்டமிட்ட செயல். இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து மகா சபை தெரிவித்துள்ளது.

ஆயருக்கு எதிராக மன்னார், வவுனியா மாவட்டங்களில் மன்னார் மாவட்ட இந்து சங் கம் என்ற பெயரில் வெளியான துண்டுப்பிரசுரம் தொடர்பாக நேற்று புதன்கிழமை மன்னார் மாவட்ட இந்து மகாசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் வீதியில் அமைக்கப்பட்டிருந்த நாவலர் திருவுருவமும் இடபக்கொடியும் தாங்கிய சிலை கடந்த 6ஆம் திகதி இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த விரும்பத்தகாத நிகழ்வு தொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபை, மன் னார் ஆயரைச் சந்தித்து கலந்துரையாடியது. சிலை உடைக்கப்பட்டமைக்கு ஆயர் தனது வருத்தத்தினை தெரிவித்ததுடன் அவ் இடத்திலேயே மீள சிலையை அமைப்பதற்கு தனது ஆதரவையும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மன்னார் ஆயர் தொடர்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை சிலர் திட்டமிட்டு வெளியிட்டுள்ளனர். அவருடைய பெயருக்கு பங்கம் ஏற்படும் வகையில் திட்ட மிடப்பட்டு சிலர் நடந்துகொண் டுள்ளனர்.

இது மத நல்லிணக்கத்தை குழப்பும் செயல். துண்டுப் பிரசுரத்துக்கும் மன்னார் மாவட்ட இந்து மகா சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.