
பங்களாதேஷூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
மிர்பூர் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக விளையாடிய குமார் சங்கக்கார 128 ஓட்டங்களையும் பிரியஞ்சன் 60 ஓட்டங்களையும் மத்திவ்ஸ் 56 ஓட்டங்களையும் விளாசினர்.
50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்த இலங்கை அணி, 289 ஓட்டங்களை குவித்து. இதன்படி 290 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பயணத்த பங்களாதேஷ் 43 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 228 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக சதம்(128) அடித்த சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டார்.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.





