கட்டுநாயக்க விமானம் நிலையத்திற்கு கிடைக்காமல் போன 15 ஆயிரம் கோடி ரூபா!!

920

விமானம் நிலையத்திற்கு..

கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டுள்ளமையினால் இந்தாண்டில் கிடைக்க வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட லாபம் இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்ந்தும் மூடப்பட்டமையினால் இதுவரையில் ஏற்பட்ட நட்டம் 900 கோடி ரூபாயை விடவும் அதிகம் என அவர் குறிப்பிட்டார்.

வழமையை போன்று விமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் தற்போது 15ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக இலாபம் பெற வாய்ப்புகள் இருந்த போதிலும் இந்த வருடம் இலாபம் 600 கோடி ரூபாய் மாத்திரம் பெற முடிந்ததாக சூரியஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையிலும் விமான செயற்பாடுகள் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பொருட்கள் ஏற்றிச் செல்லும் விமானங்களும் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்டனர். இதனால் நாட்டிற்கு பாரிய இலாபம் ஒன்றை இழக்க நேரிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தை தொடர்ந்தும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.