வருமானம் இல்லாததால் எருமை மாடு மேய்க்கும் சினிமா நடிகை!!

561


மஞ்சு பிள்ளை…


கொரோனா இந்த 2020 ல் எதிர்பாராத விதமாய் வந்து மார்ச் மாதம் முதல் அனைத்து தொழில்களையும் ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் மிகவும் பாதித்துவிட்டது.கட்டுப்பாடு தளர்வுகள் அரசால் கொடுக்கப்பட்டு வந்தாலும் சினிமா, சீரியல் தொழில் வட்டாரம் மிகவும் பாதித்துள்ளது. காரணம் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரவுவதால் தான்.


அண்மையில் இதன் மூலம் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள். இதனால் அத்துறை சார்ந்தவர்கள் மாற்று தொழிலில் இறங்கியதும் செய்திகளாக வெளிவந்தன.


இந்நிலையில் மலையாள படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வந்த மஞ்சு பிள்ளை தற்போது எருமை மாடு வளர்க்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.

சுஜித் வாசுதேவ் என்ற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துகொண்டார். கணவரின் ஆலோசனையால் முரா என்ற 50 எருமை மாடுகளை வாங்கி திருவனந்தபுரம் அட்டிங்கல்லில் பண்ணை வைத்துள்ளாராம்.

மாடு மேய்ப்படுது, தொழுவத்தில் கட்டுவது என புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.