30 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகை அமலா!!

377


நடிகை அமலா…


நடிகை அமலா தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் மிகுந்த டாப் ஹீரோயினாக இருந்து ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பலருடன் ஜோடியாக நடித்தவர்.வேலைக்காரன், மாப்பிள்ளை, சத்யா, வெற்றி விழா, அக்னி நட்சத்திரம், நாளைய மனிதன், வேதம் புதிது என பல படங்களில் நடித்தவர்.


1991 ல் கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே அவருக்கு தமிழில் கடைசி படம் என கூறலாம்.


30 வருடங்கள் கழித்து தற்போது தமிழில் எட்டிப்பார்க்கப்போகிறாராம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள 18 வது படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாம்.

சர்வானந்த் ஹீரோவாக நடிக்க ரிது வர்மா ஜோடியாக இணைகிறார். ஸ்ரீகார்த்திக் இயக்கும் இப்படத்தின் படபூஜையுடன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.