தண்ணீருக்குள்ளேயே வாழும் சிறுவர்கள் : இப்படியும் ஒரு வினோத நோய்!!

375

2 Brothers

இந்தியாவின் ஜார்க்கண்டில் வித்தியாசமான நோய் பாதிப்புக்கு உள்ளான சிறுவர்கள் இருவர், தண்ணீருக்குள்ளேயே பொழுதை கழிக்கின்றனர்.

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பாசா பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ரோஹித் சாய்(5) மற்றும் மங்கள் சாய்(3). பிறந்தது முதல் இவர்களின் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதில்லை.

இதனால் இவர்களின் உடல் வெப்பநிலை சாதாரண மனிதர்களைவிட அதிகமாக உள்ளது. எனவே இவர்களின் பெற்றோர், தண்ணீர் நிரம்பிய தொட்டி அல்லது பெரிய பாத்திரங்களில் இவர்களை இறக்கி விடுகின்றனர்.

இவர்களின் உடல் எப்போதும் குளிர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதால், நாளின் பெரும்பாலான நேரம் நீரிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் இவர்களின் பெற்றோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து இந்த சகோதரர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், இந்த சிறுவர்கள் எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் வெறும் 7,000 பேருக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு உள்ளது.

இவ்வகை நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் வியர்வை சுரப்பிகள் வேலை செய்யாது அல்லது மிக அதிகமாக செயல்படும்.
இச்சிறுவர்களின் நிலை முதல் வகையை சேர்ந்தது. வியர்வை வெளியேறாததால், இவர்களின் உடல் வெப்பநிலை அதிகம் உயர்கிறது. இந்நோய்க்கு இன்னும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

இதனால் சிறுவர்களை வெகுநேரம் தண்ணீர் தொட்டியில் வைப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.