முகக்கவசம் அணிவதால் பற்களில் கோளாறுகள் ஏற்படும் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

1429


முகக்கவசம்..கொரோனா வைரஸ் அ ச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகக் காணப்படுகின்றது. எனினும் இதனை சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசம் தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.இந்த அசௌகரியத்தினை அனைவரும் எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படியிருக்கையில் மற்றுமொரு அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவ்வாறு தொடர்ச்சியாக மாஸ்க் அணிவதனால் பற்கள் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதற்கும் வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பற்களில் துவாரங்கள் ஏற்படுதல், பற்சிதைவு மற்றும் இழையங்களில் வீக்கம் என்பன ஏற்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Halitosis எனப்படும் நோயானது சுகாதாரமற்ற அல்லது முறையற்ற சுவாசத்தினால் ஏற்படுகின்றது. இது உமிழ்நீர் சுரப்பினை குறைவடையச் செய்கின்றது.

உமிழ்நீரானது வாயினுள் உள்ள அமிலங்களை நடுநிலைப்படுத்த உதவுகின்றது. எனவே உமிழ்நீர் சுரப்பு குறைவடைவதனால் மேற்கண்ட பல் நோய்கள் ஏற்படுகின்றன.


மாஸ்க் அணியும்போது மூக்கானது பகுதியாக மூடப்பட்டு காணப்படுவதனால் சுகாதாரமற்ற அல்லது முறையற்ற சுவாசம் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.