ஜெயலலிதாவின் முடிவை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது : சொலிஸிட்டர் ஜெனரல் கே. வி.விஸ்வநாதன்!!

293

Jeyalalitaராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல முறைனானதும் அல்ல என்றே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435ன் கீழ் குற்றவாளிகள் மத்திய அரசால் விசாரணை செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தால் அப்படிபட்டவர்களை விடுவிக்கும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இந்தியக் குற்றவியல் சட்டத்தைத் தவிர சட்டவிரோதமாக வெடிப் பொருட்களை வைத்திருந்தது, ஆயுதங்களை வைத்திருந்தது, கடவுச் சீட்டுச் சட்டம், அனுமதியின்றி இந்தியாவில் தங்கியிருந்தது, இந்தியன் வயர்லெஸ் டெலிகிராஃபி சட்டம் ஆகிய மத்திய அரசின் சட்டங்களின் கீழ் வரும் குற்றங்களிலும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தார்கள் எனவும் விஸ்வநாதன் கூறினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் இந்த விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லும்போது, தமிழக அரசு அவர்களை விடுவிக்க முடிவெடுத்துவிட்டது, மத்திய அரசுக்கு மூன்று நாள் காலக்கெடு விதிக்கிறோம் என்று கூறுவது சரியல்ல, சட்டத்துக்கு புறம்பானது என்றும் இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒரு வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரித்தால், குற்றவாளியை விடுவிப்பதற்கு முன்னர் மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

-BBC தமிழ்-