இலங்கையில் கொரோனா பரவலின் எதிரொலி : 430 பேர் தனிமைப்படுத்தல்!!

760

430 பேர் தனிமைப்படுத்தல்..

இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் பணியாற்றிய குளிரூட்டப்பட்ட கட்டடத்தில் 400 ஊழியர்கள் வேலை செய்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 400 பேரையும் அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று தெளிவுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,திவுலப்பிட்டிய பகுதியில் 180 பேர் மற்றும் மினுவங்கொட பகுதியை சேர்ந்த 250 பேர் உள்ளடங்களாக 430 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அங்கு பணி புரிந்த புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.