இலங்கையில் மற்றும் ஒரு பகுதியிலும் சற்றுமுன்னர் ஊரடங்கு அமுல்!!

8274

ஊரடங்கு..

மீள் அறிவிப்பு வரும் வரை வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

முன்னதாக கம்பஹா – திவுலபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண் பணியாற்றிய தொழிற்சாலை மூடப்பட்டதுடன்,

அங்கு பணியாற்றிய 400 பேர் வரையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திவுலபிடிய மற்றும் மினுவாங்கொட பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, சற்று முன்னர் வெயங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.