நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கா? ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு!!

4526

ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு..

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து ஏமாற்றம் அடையக் கூடாது என்று அரசாங்கம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

கொவிட் நிலைமைகள் காரணமாக நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் இன்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதன் பின்னர் அதனை தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் பெண் ஒருவர் உட்பட மேலும் 4 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 115 PCR பரிசோதனைகளில் மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த வைரஸ் தொற்றாளர் தற்போது கொழும்பு IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இவர்களை விட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் மூன்று பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பெண்கள் குருநாகலில் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின்போது அந்த இரண்டு பெண்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதே தொழிற்சாலையை சேர்ந்த 41 வயதுடைய மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த மூவரும் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த 72 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!!

2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11ஆம் திகதியும், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியிலிருந்து நவம்பர் 06 ஆம் திகதி வரை நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த திகதிகளில் மாற்றம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி அதே தினத்தில் நடைபெறும்,

இதவேளை உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவியமை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்காக பரீட்சையை ஒத்திவைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.