எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கது : அரசாங்கம் மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!!

1645

அரசாங்கம் மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்..

இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளைய தினம் (07.10) வெளியாகவுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் குறிப்பிட்டதுடன் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த மக்கள் சுய சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேலை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பித்தல் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.