வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பரீட்சைகள் ஒத்திவைப்பு!!

581


பரீட்சைகள் ஒத்திவைப்பு..


வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பரீட்சைகள் கடந்த மாதம் 28ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் நாளை முதல் நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் இரு தினங்களுக்கு முன்னர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் 39 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு வேலை செய்யும் 1400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வெளியான முடிவுகளின் படி 569 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனை அடுத்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சநிலை காரணமாக இலங்கையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம்பெற்று வந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளைய தினம் (07.10) வெளியாகவுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.