ஊரடங்கு குறித்து பொலிஸாரின் புதிய அறிவிப்பு!!

1798

ஊரடங்கு குறித்து..

கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுத்துவது குறித்து அறிவிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பில் சில திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட ஆகிய பிரதேசங்கள் உள்ளிட்ட 15 பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்பொழுது இந்த அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, திவுலபிட்டிய,

மினுவாங்கொட மற்றும் வேயான்கொட ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கு மட்டும் இன்று மாலை 6.00 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டங்களின் அடிப்படையில் இந்த ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சுகாதார சேவைப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைய இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் பகுதிகளில் பேருந்துகள் பயணம் செய்ய முடிந்த போதிலும் எந்தவொரு தரிப்பிடத்திலும் நிறுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.