நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தடைகள்!!

744


கொரோனா மூன்றாம் அலை


இலங்கையில் ஏற்பட்ட கொரோனா மூன்றாம் அலை காரணமாக நாட்டில் எந்தவொரு பகுதியிலும் செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், கண்காட்சி, இசை நிகழ்ச்சி, களியாட்டங்கள், ஊர்வலம், பேரணி, தேவையற்ற ஒன்று கூடல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


கடந்த இரு நாட்களாக நாட்டில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு சில பிரதேசங்களுக்கு ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.