வவுனியாவில் முதாட்டியின் சங்கிலியை அறுத்த சகோதரர்கள்!!

1037


முதாட்டியின் சங்கிலியை..


வவுனியா சமயபுரம் பகுதியில் முதாட்டியின் சங்கிலியை அறுத்த சகோதர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமயபுரம் பகுதியில் சிறிய கடை ஒன்றினை நடாத்தி வந்த முதாட்டியிடம் இரு இளைஞர்கள் சென்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் செயற்பட்டு முதாட்டி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்து தப்பிச்சென்றுள்ளனர்.


இவ்விடயம் தொடர்பில் முதாட்டி வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு மேற்கொண்டதனையடுத்து விசாரணகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்த தலமையிலான பொலிஸ் குழுவினர் மகாறம்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 20,22 ஆகிய வயதுடைய சகோதரர்களை கைது செய்துள்ளனர்.


அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த முதாட்டின் சங்கிலியையும் மீட்டெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.