மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு!!

300


மட்டு வாவியில்..


மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக்கழக மைதானத்திற்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை, பொதுமக்கள் தகவல் வழங்கியதனைத் தொடர்ந்து குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கல்லடி டச்பார் பகுதியில் வசித்துவந்த 28 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் குறித்த மேலதிக வி சாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.