திருநங்கையுடன் திருமணம் : காதலியுடன் நிச்சயதார்த்தம் : இளைஞனின் மோசமான செயல்!!

6127


தமிழகத்தில்..


தமிழகத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்துவிட்டு, அதன் பின் அவரை தவிக்க விட்டு வேறொரு பெண்ணை அந்த இளைஞன் திருமணம் செய்யவுள்ளதால், திருநங்கை காவல்நிலையத்தில் கணவனை சேர்த்து வைக்கும் படி புகார் கொடுத்துள்ளார்.சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் எச்.ஆர்.மேனேஜராக வேலை செய்து வந்த சோபனா. திருநங்கையான இவர் எம்.பி.ஏ படித்து பட்டம் பெற்றவர்.


மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று தன்னுடைய வேலையை பார்த்து வந்துள்ளார். அந்த நேரத்தில் கொரியர் பாய் கணேஷ்குமார் என்பவர் திருநங்கை சோபனாவை, இரண்டு ஆண்டுகளாக விரட்டி, விரட்டி காதலித்துள்ளார்.


முதலில் அவரின் காதலை ஏற்க மறுத்த சோபனா, அதன் பொன் அவருடைய காதலை ஏற்றுள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தாங்கள் கணவன் மனைவி என திருமண உறுதி மொழிபத்திரம் எழுதிக்கொடுத்து அமைந்தகரையை அடுத்த செனாய் நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல, திருமண வாழ்க்கையில் இருவருக்கும் பிரச்சனை வந்துள்ளது.

கணேஷ்குமார் வேறொரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதை அறிந்த சோபனா அவரிடம் இது குறித்து கேட்க, சண்டை முற்றிய நிலையில் சோபனாவை தவிக்கவிட்டு கணேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் மிகுந்த வேதனையடைந்த சோபனா த ற் கொ லை க் கு முயற்சி செய்ய, அருகில் இருப்பவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். திருமணத்திற்கு முன்பு, நல்ல வேலை என்று இருந்த சோபனாவின் வாழ்க்கை திருமணத்திற்கு பின்பு நரகம் போன்று மாறிவிட்டது.

இந்த பிரச்சனையால், வேலையை இழந்த சோபனா, உடல் அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், கணேஷ்குமாரோ, வடபழனியில் உள்ள தனது 2-வது காதலியை திருமணம் செய்து கொள்ள நிச்சயம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, சோபனா உடனடியாக அருகில் இருக்கும் வடபழனி காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

அதாவது, தற்போதைய சட்டத்தின்படி திருநங்கைகளை திருமணம் செய்த நபர் வேறு திருமணம் செய்ய வேண்டுமானால், முறைப்படி விவாகரத்து பெற வேண்டியது கட்டாயம் என்ற விதி இருப்பதால் பொலிசார், தனது கணவர் கணேஷ்குமாரை எப்படியும், தன்னுடன் சேர்த்து வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சோபனா காத்துக் கொண்டிருக்கிறார்.