வவுனியா வைத்தியசாலைக்கு அத்தியாவசிய தேவையின்றி வருவதை தவிர்க்கவும் : பணிப்பாளர்!!

1538

வவுனியா வைத்தியசாலை..

தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து கொள்ளமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார். தற்போதைய அவசர நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

பொதுமக்கள் முடிந்த அளவு வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியத்தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்க்கவும்.

மேலும் மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னர் வருகை தரவும்.


மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை வழமையாக நடாத்துவது போல தற்போது நடாத்த முடியாமல் உள்ளது. அத்துடன் அவர்கள் ஏற்கனவே நோயாளர்களாக இருப்பதால் வைத்தியசாலைக்கு வரும் போது அவர்களை பாதுகாப்பது கடினமாக இருக்கும்.

அத்துடன் வைரஸ் தாக்கித்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்று நீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக மாணவி ஒருவர் நேற்றையதினம் இரவு திடீரென மயங்கி விழுந்தமையால் கொரோனா பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.