வைத்தியசாலைக்கு செல்வதனை புறக்கணிக்கும் கொரோனா நோயாளிகள் : அரசாங்கம் கடும் எச்சரிக்கை!!

620

கொரோனா நோயாளிகள்..

கம்பஹா மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் வண்டிகளை அனுப்பினால் அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு செல்வனை புறக்கணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “சுகாதார அமைச்சினால் கம்பஹா மாவட்டத்தில் நோயாளிகளை அடையாளம் காண பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அவர்கள் நோயாளிகள் என உறுதியானதைத் தொடர்ந்து அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்காக சுகாதார அமைச்சினால் அவர்களின் வீடுகளுக்கு அம்பியுலன்ஸ் வண்டிகளை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் சிலர் சிகிச்சை நிலையங்களுக்கு செல்வதனை புறக்கணித்துள்ளதாக தகவல் கிடைத்தது. இலங்கை மக்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சினால் வீடுகளுக்கு அனுப்பப்படும் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.

சிகிச்கைக்காக செல்லாமல் அதனை புறக்கணிப்பது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தவறு என்பதனால், அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்” என சுகாதார அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-