கரை ஓதுங்கிய உடைந்த பாகம் : 239 பேருடன் மாயமான MH370 விமானம் விவகாரத்தில் புதிய திருப்பம்!!

11245

MH370..

அவுஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள தொலைதூர கடற்கரையில் உடைந்த விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உடைந்த பாகம் 2014 ஆம் ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்துடையது என்றும், விமானத்தை கண்டுபிடிக்க புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்று பலர் கூறுகின்றனர்.

மார்ச் 8, 2014 அன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் புறப்பட்ட MH370 விமானம் 40 நிமிடங்கள் ராடாரிலிருந்து காணாமல் போனது.

பல குழுக்கள் தே டியும் விமானத்தை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், என்ன நடந்திருக்கும் என பலர் பல கோட்பாடுகளை முன்வைத்தாலும், இன்று வரை மா யமானத்திற்கு என்ன காரணம் என கண்டறிய முடியவில்லை. எனினும், விமானத்தில் பயணித்த அனைவரும் இ றந்துவிட்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துவிட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள தொலைதூர கடற்கரையில் மீனவர் ஒருவர் உடைந்த பாகம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தை கண்டுள்ளார். அந்த பாகம் வணிக விமானத்துடையது என்று நம்பப்படுகிறது.

வட குயின்ஸ்லாந்தில் Cape Tribulation வடக்கே ஐந்து மைல் உள்ள கடற்கரையில க ண்டுபிடிக்கப்பட்ட பாகத்தை எல்கோட் என்ற மீனவர் புகைப்படம் எடுத்து விமான பராமரிப்பு பொறியியல் பேஸ்புக் குழுவில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து பலர் அவரை தொடர்புகொண்டுள்ளனர். இதனையடுத்து அவர் அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், க ண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் கா ணாமல் போன போயிங் 777 விமானத்தைச் சேர்ந்தவை அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.