தனிமைப்படுத்தல் நிலையத்தில் உ யிரிழந்த பெண் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!!

4081

தனிமைப்படுத்தல் நிலையத்தில்..

வெலிகந்த பிரதேசத்தில் உள்ள கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது பெண் ஒருவர் உ யிரிழந்தமை தொடர்பில் இராணுவ தளபதி தகவல் வெளியிட்டுள்ளார்.

68 வயதான பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்தார். இவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உ யிரிழக்கவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உ யிரிழந்த பெண் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதியின் தாய் என தெரியவந்துள்ளது. இவர் கம்பஹா, வரபலன, உடப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

எனினும் குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றினால் உ யிரிழக்கவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் குறித்த பெண் மாரடைப்பு காரணமாகவே உ யிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உ யிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டமை அடுத்து, அவரின் தாயை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்து சென்று 10 நிமிடங்களில் உ யிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.