உலக சாதனை படைத்த பீகார் மாநிலம்!!

758

Biharஉலகிலேயே 20 கி.மீ பரப்பளவில் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது இந்தியாவின் பீகார் மாநிலம்.

இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் தற்போது ஹைடெக் சாதனை படைத்துள்ளது.

இனிமேல் பாட்னாவின் என்ஐடி கல்வி நிறுவனத்தில் இருந்து தானாபூர் பகுதி வரை கிட்டத்தட்ட 20 கி.மீ பரப்பளவில் வசிக்கும் மக்கள் எவ்வித தடையுமின்றி, வைஃபை வசதியை அனுபவிக்கலாம், எவ்வித கட்டணமும் கிடையாது.

இன்டர்நெட் தகவல் மையத்தை திறந்து வைத்த முதல்வர் நிதிஷ் குமார் இந்த இலவச வைஃபை வசதியையும் ஆரம்பித்து வைத்தார்.
பல பகுதிகளில் இந்த வைஃபை வசதியை கொண்டு 100 கண்காணிப்பு கமெராக்களை பொருத்தும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய நிதிஷ், ராஜ்கிர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை சீனா தான் முதலிடத்தில் வகித்தது, அதுவும் வெறும் 3.5 கிமீ பரப்பு பகுதிகளில் தான் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கியிருந்தது. இதை விட பல மடங்கு பெரிய அளவில் பீகார் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் வைஃபை மண்டலத்துக்கு உட்பட்ட 11 முக்கிய சாலைகளில் எந்த வாகனம் சென்றாலும், அதன் எண்ணை துல்லியமாக கண்காணிப்பு கமெரா மூலம் பார்க்க முடியும், ஒரு குறிப்பிட்ட வாகனம் எங்கெல்லாம் செல்கிறது என்பதை கண்காணிக்க முடியும்.