தான் நிராகரித்தவரிடமே கையேந்திய பேஸ்புக்!!

294

whatsapp cofounder

இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி விலை கொடுத்து வட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியுள்ளது பேஸ்புக். காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.

இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக வட்ஸ் அப் கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம்.

நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போவதால் இதனை பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், ஒரு காலத்தில் பேஸ்புக் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டவர் தான் வட்ஸ் அப்பின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன்.

அன்று யாரை நிராகரித்ததோ இன்று அவரிடமிருந்தே, அவரது நிறுவனத்தை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பேஸ்புக்.
இதே பிரையன் நான்கு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவன வாசலில் வேலை கேட்டு போய் நின்றார். ஆனால் அவருக்குக் கிடைத்த பதில் நீ வேண்டாம் போ என்பதே.

ஆனால் இன்றே பிரையனிடம் இருந்து வட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியுள்ளது. முன்பே பிரையனுக்கு வேலை கொடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா.

தன்னை பேஸ்புக் நிராகரித்து விட்டதாக டுவிட்டரில் போட்டுள்ளார் பிரையன். அதில் தன்னை பேஸ்புக் நிராகரித்து விட்டது, எனவே மக்களுடன் இணைந்திருக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது, அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், டுவிட்டரும் கூட பிரையனை நிராகரித்தது தான்.