சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உ யிரிழப்பு!!

927

மொனராகலை மெதகம பிரதேசத்தில்…

கொரோனா நோயாளியுடன் பேருந்தில் புதல்வி பயணித்ததால், சந்தேகத்தின் பேரில் மொனராகலை மெதகம பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் நேற்று உ யிரிழந்து ள்ளதாக தெரியவருகிறது.

மொனராகலை பொல்கல்ல -வல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான நபரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளதாக மொனராகலை மருத்துவமனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மொனராகலை வரை தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கடந்த 4 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது.

உ யிரிழந்த நபரின் புதல்வியும் இதே பேருந்தில் பயணித்துள்ளதாக கண்டறியப்பட்டதுடன் பின்னர் சுகாதார அதிகாரிகள், முழு குடும்பத்தையும் அவர்களின் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் வீட்டில் தனிமைப்பட்டிருந்த 70 வயதான நபருக்கு நேற்றிரவு 7 மணியளவில் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதுடன் அவர் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ யிரிழந்து ள்ளார்.

உ யிரிழ ந்த நபரின் உடலை காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்ற மொனராகலை மருத்துமனை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உ யிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிய PCR பரிசோதனை நடத்தவே உடல் காரப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.