வவுனியாவில் பல இடங்களில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கும் நடவடிக்கை!!

1405

சோதனைச்சாவடி..

வவுனியாவின் முக்கிய சில இடங்களில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றச்செயல்கள், போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பொலிஸாரின் நலனை கருத்தில் கொண்டு அரச தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (மொபிடல்) நிதி அனுசரனையில் வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில், வவுனியா மணிக்கூட்டுச்சந்தி, வவுனியா நகர் போன்ற பகுதிகளில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.