சாரதி இல்லாது இயங்கிய வேனில் சிக்குண்டு ஒரு வயது குழந்தை பரிதாப மரணம்!!

761

Babyகலகெதர, உடபோகட, வெத்தாவ பிரதேசத்தில் குழந்தை ஒன்று வேன் சில்லுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.

வேன் என்ஜின் நிறுத்தப்படாது வீட்டு முற்றத்தில் நிறுத்தியிருந்தவேளை என்ஜின் இயங்கியமையின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது ஒரு வயதும் இரு மாதங்களும் மட்டுமேயான குழந்தை உயிரிழந்துள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த குழந்தை கலகெதற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் கலகெதற வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.