வவுனியாவில் சுகாதார நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!!

1072

உயர்தரப் பரீட்சை..

நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை இன்று (12.10.2020) ஆரம்பமாகியுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்றது.

நாடுமுழுவதும் 3 லட்சத்து 62 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றுகின்றதுடன் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை இப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 39 பரீட்சை மத்திய நிலையங்களில் 3398 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றனர்.

மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம், உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் எந்த சிக்கலும் இன்றி பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதுடன் இதனால் பெற்றோர் எவ்வித சந்தேகமும் இன்றி பிள்ளைகளை பரீட்சைக்கு அனுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை ஊரடங்குச் சட்ட அனுமதிபத்திரமாக பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளின் நன்மை கருதி பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.