இலங்கையில் தற்போது பரவும் புதிய வகை கொரோனா : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

1103

கொரோனா..

தற்போது நாட்டில் பரவும் கொரோனா வைரஸின் வகை இலகுவாக மற்றவர்களுக்கு பரவ கூடியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே அதன் பரவல் மிக வேகமாக காணப்பட கூடும் என அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸின் வீரியம் மிக அதிகம் என வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து இன்னுமொருவருக்கு வைரஸ் பரவியவுடன்,

பாதிக்கப்பட்ட மற்றவரின் உடலில் வைரஸ் மேலும் அதிகமாக வைரஸ்களை உற்பத்தி செய்யும் என தெரியவந்துள்ளது. இம்முறை ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் உடலுக்குள் தொற்றாத வகையில் மிகவும் பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

தொழிற்சாலையிலும் ஒரு சில வாரங்களாக ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் இடையில் வேகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும் எங்கிருந்து ஆரம்பமானது என ஆராயப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகள் நூற்றுக்கு 70 வீதம் நோயாளிகளால் நிறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-