எலிக்காய்ச்சலால் பெண்ணொருவர் உயிரிழப்பு!!

515

எலிக்காய்ச்சலால்..

மட்டக்களப்பு – வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ரிதீதென்ன 2ஆம் பரம்பரைக் கிராமத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முஹம்மது இஸ்மாயில் நுஷ்ரத் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணே கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

இவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த புதன்கிழமையன்று இந்தப் பெண் திடீரென சுகவீனமடைந்துள்ள நிலையில் இடுப்பின் ஒரு பகுதி அவருக்கு செயலிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக வியாழனன்று அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சனிக்கிழமை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உ யிரிழந்துள்ளார்.

ரிதீதென்ன 2ஆம் பரம்பரைக் குடியேற்றப்பகுதி, ஓமடியாமடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீராடுவதற்கும் ஏனைய பாவனைக்கான நீரைப் பெறுவதற்கும் அருகிலுள்ள கடவத்தமடு குளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

குளத்தைச் சூழ அடர்ந்த புற்புதர்களைக் கொண்ட இந்தப் பகுதியில் எலிகள் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.