லண்டனில் நடந்த துயரம் : தாயுடன் சென்ற 4 வயது சிறுவன் மரணம்!!

998

லண்டனில்…

லண்டனில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 4 வயது சிறுவன் உ யிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த சிறுவனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஹேய்ஸ், ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், உ யிரிழந்த சிறுவன் மற்றும் விபத்து குறித்து பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் பெயர் அகர்வின் சசிகரன் , சம்பவ தினத்தன்று சிறுவன் மற்றும் அவனின் தாயார் அருகில் இருக்கும் கே.எப்.சிக்கு இரவு உணவிற்காக சென்றுள்ளனர்.

அதன் பின் வீடு திரும்பும் நேரத்தில், தாய் மற்றும் மகன் அங்கிருக்கும் சாலையை கடக்கும் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, திடீரென்று சிறுவன் சாலையில் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த வழியே வந்த கார் சிறுவன் மீது பயங்கரமாக மோதியதால், சிறுவன் உடனடியாக அருகில் இருக்கும், மத்திய லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

ஆனால் சிறுவன் உ யிரிழந்துவிட்டான். இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார், இந்த விபத்திற்கு காரணமான டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்படவில்லை.

சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், இது ஒரு மோசமான நாள், நாங்கள் அனைவரும் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். இந்த சாலையில் 40 கி.மீற்றர் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் பல கார்கள் மிக வேகமாக செல்கின்றன.

பெரும்பாலும் வேக வரம்பை விட மிக வேகமாக செல்கின்றன. இது உண்மையில் நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அதிகமான குழந்தைகளும் உ யிரிழக்க நேரிடும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.