சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

504

சுகாதார ஒழுங்கு..

சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினத்திற்குள் வௌியிடப்படும் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், டொக்டர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று எவ்வாறு பரவியுள்ளது என்பதை கண்டறிந்துள்ளதால், மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் இதனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி அண்மையில் தெரிவித்திருந்தார்.

வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்படுவோருக்கு 06 மாதங்கள் சிறைத் தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட திருத்தங்களும் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.