கொழும்பில் மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம் : சுகாதார அமைச்சின் பேச்சாளர்!!

592

கொழும்பில்..

மினுவாங்கொட தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் 160 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியை கட்டுப்படுத்த கூடிய நிலையில் உள்ளது. எனினும் கொழும்பு மாவட்டத்தில் அதிக மக்கள் உள்ளமை, சிறிய இடத்தினுள் பாரிய அளவிலான மக்கள் வாழ்கின்றமை மற்றும் நகர சூழல் ஆகிய விடயங்கள் காரணமாக ஆபத்துக்கள் உள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்கள் மேலும் அடையாளம் காணப்பட்டால், தொடர்ந்து பரவும் ஆபத்து அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் எதிர்வரும் நாட்களில் சிரமமான நிலை ஏற்பட கூடும் என அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். -தமிழ்வின்-