எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது : மக்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் : இராணுவ தளபதி!!

289


கொரோனா வைரஸ்..


கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பிலும் நோய் அறிகுறிகள் இருப்பினும் உடனடியாக சுகாதார பிரிவிடம் அறிவித்து ஆலோசனை பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் மற்றும் நெருங்கி செயற்பட்டவர்களுக்கு தேவையான வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அவசியமான அளவு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,


எதிர்வரும் நாட்களில் அதன் அவசியம் அதிகரித்தால் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐடிஎச் வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை வரம்பை எட்டியுள்ளமையினால் பல வைத்தியசாலைகள் சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை எதிர்வரும் வாரங்களுக்குள் சீராகுமா என இராணுவ தளபதியிடம் வினவிய போது, இது தொடர்பில் ஒன்றும் கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை பாதுகாத்துக் கொளள் வேண்டும் என்பதே முக்கியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.