அதி ஆபத்து நிலை தோன்றினால் ஊரடங்கு அமுல்படுத்துவதை தவிர்க்கமுடியாது : இராணுவத் தளபதி!!

914

ஊரடங்கு..

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா அதி ஆபத்து நிலை தோன்றினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்செய்வதை தவிர்க்க முடியாதுபோகும், என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதி ஆபத்து என்று கருதப்பட்ட பிரதேசங்களில் ஊரங்குச்சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாத்திரம் 68 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.

இவர்களில் 22 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 46பேர் தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும் கண்டறியப்பட்டனர். மினுவாங்கொட, கட்டுநாயக்க மற்றும் கம்பஹா பகுதிகளில் இருந்தே இவர்கள் கண்டறியப்பட்டனர்.

இதேவேளை, கொழும்பில் இருந்து இரண்டு தொற்றாளிகளும் வத்தளை மற்றும் கந்தானையில் இருந்தும் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-