கொரோனாவை விளையாட்டாக எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

951

கொரோனா..

கனடாவை சேர்ந்த இளம்பெண் கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என அதை சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ம ரணத்தை தொட்டு விட்டு அதிர்ஷ்டவசமாக உ யிர் பிழைத்துள்ளார்.

Vancouver-ஐ சேர்ந்தவர் Alison Lowe (31). சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் ஜாலியாக வெளியில் சுற்று திரிந்துள்ளார். அதாவது வலிமை வாய்ந்த தன்னையும், தன் நண்பர்களையும் கொரோனா தா க்காது என கொடிய நோயை சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் Alisonன் நண்பர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து செப்டம்பரில் கொரோனாவால் Alison பாதிக்கப்பட்ட நிலையில் 16 நாட்கள் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

பின்னர் ஒருவழியாக கடந்த 10ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். Alison கூறுகையில், கொரோனாவை நான் சாதாரணமாக எடுத்து கொண்டேன், அதன் விளைவு என்னை வைரஸ் பாதித்தது.

என் உடல் நிலை மோசமானதால் நான் பிழைப்பது கடினம் என்றே மருத்துவர்கள் கருதினார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் உ யிர் பிழைத்தேன், இது மருத்துவர்களையே ஆச்சரியமடைய வைத்தது.

நான் வீடு திரும்பிய போதிலும் ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதோடு, கூடுதல் ஆக்சிஜனும் எனக்கு தேவைப்படுகிறது. படிக்கட்டுக்கு மேலேயும் கீழேயும் நடக்க சிரமப்படுகிறேன் என கூறியுள்ளார்.