பயணியின் உடலில் இருந்து வந்த இரத்த கசிவு : பாதிவழியில் தரையிரங்கிய விமானம்!!

3552


பாதிவழியில் தரையிரங்கிய விமானம்..


ஐரோப்பாவின் லிவர்பூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ரியானைர் விமானம் ஒன்று பயணி ஒருவரின் மோ சமான நடத்தையின் காரணமாக பாதி வழியில் தரையிறங்கிய சம்பவம் பெரும் ப ரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வெள்ளியன்று, லிவர்பூல் விமான நிலையத்திலிருந்து காலை 6.29 மணிக்கு புறப்பட்ட ரியானைர் நிறுவன விமானத்தில் பின்பக்க இருக்கையில் இருந்த பயணி ஒருவர் க டுமையான வா க்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக விமானம் பாதி வழியிலேயே தரையிறக்கப்பட்டது.


விமானம் தரையிறங்கிய பின்னர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து சென்றதாக சக பயணிகள் கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து இதர பயணிகளையும் காவல்துறையினர் விமானத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.


நிலைமையை உணர்ந்த காவல்துறையினர் குறிப்பிட்ட நபரின் உடல் நிலையை கண்டு இதர பயணிகள் அ ச்சமடையக்கூடாது என சக பயணிகளுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

காவல்துறையினர் அழைத்து சென்ற குறிப்பிட்ட பயணியின் உடலிலிருந்து இரத்தம் கசிவதை சக பயணிகள் கண்டு அச்சமடைந்திருந்துள்ளனர். இந்த தகவல் விமான ஊழியர்களுக்கு தெரிய வந்ததையடுத்து விமானமானது போர்த்துகலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பின்னர் ஐந்து காவல்துறை அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைந்து சம்பந்தப்பட்ட நபரை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்தது மேலதிக தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஏன் அந்த நபர் வா க்குவாதத்தில் ஈடுபட்டார் என்றோ, அவரது உடலில் ரத்தக்கசிவு எப்படி ஏற்பட்டது என்றோ காவல்துறையனர் கூறவில்லை.