வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் திறக்கப்பட்டது!!

2112

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை..

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதன் மூலம் சமூகபரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

தொற்றுநீக்கல் செயற்பாட்டிற்காகவே வைத்திசாலை பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது. ஏனைய சிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல நடைபெற்று வருகின்றது.

ஊழியர்கள் பயணிக்கும் மற்றைய வாயில் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!!

வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், தாதியர்ரகள், வைத்தியர்கள் மட்டும் உட் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற மற்றும் கிளினிக் என்பவற்றுக்கு வருகை தந்த பலரும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.