மலேரியாவை பரப்பும் மனிதக் குரங்குகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

499

Monkey

ஆபிரிக்காவில் உள்ள மனிதக் குரங்குகளிடம் இருந்து தற்போது புதிய வகை மலேரியா வைரஸ் கிருமிகள் பரவி வருவதாக விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு ஐரோப்பா திரும்பிய பயணி ஒருவர் கடுமையான மலேரியா நோயால் பாதிக்கப்பட்டார்.
இவரை பரிசோதனை செய்த பார்த்த போது, புதிய வகையான “பிளாஸ்மோடியம் விவாஸ்” என்ற வைரஸ் கிருமி தாக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த நோய் கிருமி குறித்து பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் உள்ள பேரல்மான் மருத்துவ பள்ளியின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில் மனிதர்களின் உடலில் 5 வகை பிளாஸ்மோடியம் வைரஸ்கள் மலேரியாவை உருவாக்கும்.

அவற்றில் பி விவாஸ் எனப்படும் பிளாஸ்மோடியம் விவாஸ் வைரஸ் கிருமி மூலம் ஐரோப்பிய சுற்றுலா பயணிக்கு மலேரியா தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் கிருமிகள் ஆபிரிக்காவின் அடர்ந்த வனப்பகுதிகளில் வாழும் மனித குரங்குகளின் உடலில் உள்ளது. இவற்றின் மூலம் மனிதர்களுக்கும் பரவி நோய் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் மிக ஆபத்தானது என்றும், ஆபிரிக்க கண்டத்தில் மட்டுமே இந்த வைரஸ் பரவி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.